சுஜாதா ஒரு முறை சொன்னது நியாபகம் இருக்கிறது, அவருடைய பழைய நாவலை திரைப்படமாக எடுத்து அதை அவர் பார்த்து ஏண்டா அந்த நாவலை எழுதினோம் என்று வருந்தியதை...பரவாயில்லை, கொஞ்சம் புண்னியம் செய்திருப்பார் போல..சொர்கத்திற்க்கு சென்றுவிட்டார், இல்லையென்றால் அவரின் பிரிவோம் சந்திப்போம் நாவலை "ஆனந்த தாண்டவம்" என்ற அகோர தாண்டவமாய் ஒரு படத்தை பார்த்து, ஏண்டா இந்த நாவலை எழுதினோம் என்று நரகத்திற்குள் ஓடி ஒழிந்திருப்பார். சொர்கத்தில் நிம்மதியாக வாழ்க சுஜாதா! இதில் இன்னும் ஒரு நகைச்சுவை என்னவென்றால், சென்ற வாரம் கோவையில் பிரபல திரைஅரங்கில் வெளியிட்ட முதல் நாள் இந்த ஆகச்சிறந்த படைப்பை பார்க்க சென்றபொழுது, ஆரம்பதில் பத்து பேர் இருந்தனர், முடிவில் நான் மட்டுமே!! அதுவும் முடிவில்லாமல் தூங்கிவிட்டதால்...
1 comment:
whats up everyone
just signed up and wanted to say hello while I read through the posts
hopefully this is just what im looking for looks like i have a lot to read.
Post a Comment