ஒரு ஊருக்கு செல்கிறீர்கள், அதில் ஒவ்வொரு இடத்திலும் உங்கலுக்கு ஒரு விதமான நினைவுகள் வருகிறது, அதுவும் நீங்கள் பார்க்காத ஒரு மனிதர் உங்கலுக்கு அவ்வூரின் அருமை, பெருமைகளை, நினைவுகளை, வரலாறை, தெருச்சண்டையை, உங்களின் நினைவுகளினூடே பகிர்ந்துகொள்கிறார் என்றால் அது சுஜாதவும், ஸ்ரீரங்கமும் தான். நேற்று ஸ்ரீரங்கத்தில் இருந்தபோது எனக்கு அப்படி ஒரு கலா-அனுபவம் கிடைத்தது, எந்த வீதியில் நடந்தாலும் சுஜாதாவும் என்னுடன் நடந்தார், அவ்வூரின் திசை காட்டிகளை விட அவரின் வார்த்தைகள் தான் என்னை இட்டுச்சென்றன. அவரின் எழுத்துகளின் வலிமை, எனக்கு நிஜ கடவுளை காட்டியது..சுஜாதா எங்கும் செல்லவில்லை, இங்கு தான் இருக்கிறார் என்பதை நேற்று தான் அரிந்தேன்.
No comments:
Post a Comment