Tuesday, August 18, 2009

பொக்கிஷம், ஒரு வாழ்க்கை புதையல்...

சில நாட்களாக ஒரு படத்தை குறைந்தது இரண்டு முறை பார்க்காமல் விமர்சனம் எழுதுவது இல்லை என்று இருந்தேன், ஆனால் பொக்கிஷம் படத்தை இரண்டாவது முறை பார்க்கும் பொறுமை-யே, மன வலிமையே இல்லாத காரணத்தினால் அதில் உள்ள சில நல்ல முயற்சிகளை பற்றி குறிப்பிட விரும்புகிறேன்.
காதல் ஒரு மனிதனை அந்நாட்களில் கடிதங்கள் வழியாக எப்படி ஆட்டிப் படைத்திருக்கிறது என்பதைக் மிக இனிமையாய் நம் கண் இமைகளை நனைக்கிறது, பொக்கிஷம்! நிறைவேறாத காதலுக்கு அர்த்தம் தர முனைந்திருக்கிறார். அதில் நம் கண்களில் நம்மை அறியாமல் நீர் வழிவது, சேரனின் வெற்றி...ஆனால், இவ்வளவு படங்கள் எடுத்தும் அவரிடம் உள்ள amature-ism ஒரு அறிய பொக்கிஷத்தை தொலைத்து விட்டது. தயவு செய்து நீங்கள் camera பின்னால் மட்டுமே இருந்தால் உத்தமம் ஐயா, வேண்டாம் நடிப்பு, please, முடியலை...ஆனால் உங்கள் முயற்சிக்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. பல தவறுகலை தவிர்த்திருந்தால் இது ஒரு மாபெரும் படைப்பு. சீரிய முயற்சி, தாராளமாய் ஆதரிக்கலாம்...கொஞ்சம், sorry, நிறைய பொறுமை இருந்தால்!
மெல்லிய சாக்ஸஃபோன் கசிவால் சில இடங்களில் பின்னனி இசை பின்னி எடுக்கிறது, ஆனால் அதுவே பல இடங்களில் பாடாய் படுத்துகிறது...‘நிலா நீ வானம் காற்று'...பாடல், சின்மயி,விஜய் ஏசுதாஸின் குரலில் இனிமை.
இன்றைய மானங்கெட்ட மசாலா படங்களுக்கு நடுவில் மனதை உலுக்கும் ஒரு முயற்சி!!

No comments: