Monday, April 27, 2009

மதவாதம், அயோக்கியத்தனம், இந்திய அரசியல்

பாரதிய ஜனதா கட்சி ஒரு மதவாத கட்சி என்று கூரும் மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் மதச்சர்பற்ற கட்சிகளா? வன்னியர்கள் ஓட்டுகள் மட்டும் வாங்கி தன் மகனை மந்திரி ஆக்கும் பா.ம.க, முஸ்லிம்களை மட்டும் வைத்து கட்சி நடத்தும் முஸ்லிம் லீக், யாதவர்களை வைத்து நடத்தும் முலாயம், லாலு, மராத்தியர்களை நம்பி நடத்தும் சரத்பவார், சீக்கியர்களால் நடத்தப்படும் கட்சிகள், வட இந்தியர்களை, ப்ராமணர்களை எதிர்து அரசியல் தொழில் செய்யும் தி.மு.க, தலித் மக்களை விலை பொருட்கள் ஆக்கி தன் சொந்த பொருட்களை பெருக்கும் விடுதலை சிறுத்தை, மாயாவதி, பாஸ்வான், இன்னும் பிற ஜாதி கட்சிகள் என இந்தியா எனும் ஒரு தொழில் நிறுவனத்தை நடத்த வகுப்புவாத, இனவாத, மதவாத பிரிவினைகளை உருவாக்கும் அமைப்புகளை(ப.ஜா.க உட்பட)  மட்டுமே நம்பி நாம் நல்லது நடக்கும் என்று இன்னும் நம்பிக்கொண்டு வாக்குசாவடிக்கு சென்றால் நம் தலை விதியை யாராலும் மாற்றமுடியாது...
நாடு முழுவதும் அடிப்படை வசதிகள் இல்லை, சீரான கல்வி வசதிகள் இல்லை, சரியான பொருளாதர கொள்கைகள் இல்லை, உலகத்திற்கு உணவு அளிக்கும் விவசாயிகலுக்கு மூன்று வேலை உணவே இல்லை,
ரோடு, மின்சாரம், இன்னும் பிற இல்லை-கள்..ஆனால், Mc, RC, OC-கள் மட்டும் வீதிக்கு வீதி உண்டு!! சென்ற மாதம் முதல் இங்கே நெடுஞ்சாலை, குருஞ்சசாலை பூராவும் சாலையை மறித்துக் கொண்டு, வாகனங்களோ நம்மை போல் நடப்பவர்களோ செல்லவே முடியாமல் 100அடிக்கு  ஒரு கட் அவுட்டுகள் வைக்கப்பட்டிருக்கின்றன. பிற வளர்ந்த நாடுகளில் இப்படி இல்லை, அங்கே ஜனாதிபதி பாராளுமன்றத்துக்குப் போவதற்காக யாரும் போக்குவரத்தை நிறுத்தி வைப்பதில்லை. அங்கே ஜனாதிபதிக்கும், துப்புரவுத் தொழிலாளிக்கும், பணக்காரனுக்கும், ஏழைக்கும் அடிப்படை வசதி ஒன்றுதான். சாரு,  ஞாநி, இன்னும் பிற சீர்திருத்தவாதிகள் கூறியதைப் போல்(ஆனால் இவை சாருவின் கீ-போடில் இருந்து வந்த நிதர்சன வார்த்தைகள்) இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் யாவரும் (தன் அரசியல் அயோக்கியத்தன செயல்களை தானே தன் படங்களில் குறை கூறும் காப்டன், கம்யூனிஸ்டகள் உட்பட) திருடர்கள்; கொள்ளைக்காரர்கள்; பயங்கரவாதிகள்; கொலைகாரர்கள்; போலீஸை வேலைக்காரர்களாக வைத்திருக்கும் சமூக விரோதிகள். இவர்கள் செய்யாத அயோக்கியத்தனமே இந்த உலகத்தில் எதுவும் கிடையாது. கொலை, கொள்ளை, திருட்டு, கற்பழிப்பு, ஃபோர்ஜரி, தேசத்தையே காட்டிக் கொடுத்தல் போன்ற செயல்களே இவர்களின் மூலதனம். பணத்துக்கும் அதிகாரத்துக்கும் எதையும் செய்யத் துணிந்த இவர்கள் அனைவரும் தூக்கில் போடப்பட வேண்டியவர்கள்; அல்லது, நடுத்தெருவில் வைத்துக் கல்லால் அடித்துக் கொல்லப்பட வேண்டியவர்கள். இந்திய தேசத்தில் 75 விழுக்காடு மக்கள் தெருநாய்களைப் போல் வாழ்வதற்கு இந்திய அரசியல்வாதிகள் என்று அறியப்படும் இந்தக் கிரிமினல்களே காரணம்..ஒன்றிரண்டு பேர் நீங்கலாக...இதில் மாற்றுக்கருத்து இருந்தால் சொல்லுங்கள், விளக்கம் தர நான் தயார்.. அப்படி ஏதானும் இருந்தால், நீங்கள் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி என்பதில் எனக்கு கொஞ்சமும் சந்தேகமில்லை!.. இதுவரை நான் ஓட்டுப் போட்டதை எண்னி வெட்கப்படுகிறேன், இனிமேல் போடுவதாக இல்லை.

No comments: